மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸார் விசாரணை தொடக்கம்

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். 2019-ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த செப். 23-ம் கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியஅலுவலகம், வேளச்சேரியில் உள்ள வெங்கடாசலத்தில் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வெங்கடாசலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றுகோரிக்கை வலுத்தது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில், வெங்கடாசலம் தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவு போலீஸார் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக அவரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் அண்மைக்காலமாக அவரது தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE