திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் மகன் கீழே தள்ளிவிட்டதில் மயக்கமடைந்த தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகேயுள்ள கிழக்கு அய்யம்பாளையம் தெற்கு பள்ளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மனைவி பாப்பாத்தி (55). இவர்கள் மகள்கள் பழனியம்மாள், தங்கமணி. மகன்கள் முருகன், காமராஜ், கேசவன் (29). இதில் 2 மகள்கள், 2 மகன்களுக்குத் திருமணமாகிவிட்டது. கடைசி மகன் கேசவனுக்குத் திருமணமாகவில்லை. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேசவன் நேற்றிரவு தாய் பாப்பாத்தியிடம் தனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாப்பாத்தியைத் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த அவர் மயக்கமடைந்தார். இதனையடுத்து பாப்பாத்தியை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவந்த நிலையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பாலவிடுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கேசவனைத் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago