பெரம்பலூரில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற தலைமைக் காவலர் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் செல்வராஜ்(50). இவர், பெரம்பலூர் கவுள்பாளையத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு 21 வயதில் பட்டப்படிப்பு முடித்த மகளும், பிளஸ் 1 படிக்கும் மகனும் உள்ளனர்.

செல்வராஜன் மனைவி மாலதி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட செல்வராஜ் கடந்த சில மாதங்களாக ஒழுங்காக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், டிச.12-ம் தேதி இரவு செல்வராஜிடம் கோபித்துக்கொண்டு, அவரது மகன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது மகள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வராஜை மீட்டு, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்