விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இளைஞர் ஒருவர், அலுவலக வாயிலில் நின்றிருந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, பெயின்ட்க்கு பயன்படுத்தப்படும் வார்னிஷை வாகனத்தினுள் ஊற்றி தீ வைத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்ட, அருகிலிருந்த சிலர் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் வாகனத்திற்கு தீ வைத்தது தெரியவந்தது.
» புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பிரபல ரவுடி பாம் ரவி உட்பட இருவர் கொலை
» போலீஸ்காரரை மதுபோதையில் தாக்கியவர் கைது: மாவுகட்டுடன் மன்னிப்பு கேட்கும் விடியோ வெளியானது
இதையடுத்து விசாரணை நடத்தியபோது, கண்டாச்சிபுரம் இந்திராநகர் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித்(25) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை பிடித்துவந்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த வேலைக்குச் சென்றாலும் லஞ்சம் கேட்பதாகவும், அதனால் ஆத்திரத்தில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago