சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய காவலர் மீது லாரி மோதியதில் உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே கீழப்பசலையைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கண்ணன் (33), இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவுப்பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் பரமக்குடியில் இருந்து கீழப்பசலைக்கு வந்து கொண்டிருந்தார்.
மானாமதுரை அருகே மேலப்பசலை என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
» கரோனா பரவலால் கைதிகளை ஜாமீன், பரோலில் விடுவிக்கக் கோரிய வழக்கு: இரண்டாம் அமர்வுக்கு மாற்றம்
இதில் காயமடைந்த கண்ணனை ஆம்புலன்ஸில் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்பு சாக்கோட்டை காவல்நிலைய காவலர் காரைக்குடி அருகே சாலை விபத்தில் இறந்தார். இந்நிலையில் மற்றொரு காவலர் சாலை விபத்தில் இறந்தது போலீஸார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago