மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலை தொடர்பாக 5 பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரண் 

By கி.தனபாலன்

மதுரை பாண்டி கோயில் பூசாரி கொலையில் தொடர்புடைய 5 பேர் இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குருசாமி மகன் முத்துராஜா(28). இவர் மதுரை பாண்டி கோயிலில் உள்ள ஆண்டிச்சாமி கோயில் பூசாரியாவார். இவரை கடந்த 10-ம் தேதி முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்தவர்களை தேடி வருந்தனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மதுரை இளமனூரைச் சேர்ந்த வீரணன் மகன் கோபி(22), மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கரன்(23), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த முத்துவேல் மகன் கவுதம்(25), நடுக்காட்டான் மகன் ராஜபாண்டி(26), அரசு மகன் பாண்டித்துரை(24) ஆகியோர், இன்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்களை நீதித்துறை நடுவர் ஜெனிதா வரும் 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

12 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்