வீடுகளுக்கு முன்பு நிறுத்திய வாகனங்களை நொறுக்கிய கும்பலை பிடிக்க, வலியுறுத்தி மதுரை திடீர்நகர் மக்கள் சாலை மறியல் செய்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையப்பகுதியிலுள்ள திடீர்நகர் பகுதியில் வசிக்கும் சிலர் தங்களது வீடுகளுக்கு முன்பு, ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை இரவில் நிறுத்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவிலும் நிறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், நள்ளிரவில் அப்பகுதிக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 ஆட்டோக்கள், 5 இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி இருப்பது இன்று காலை தெரியவந்தது.
இதனால், ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியினர் திரண்டு பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
» வைகை நீர் திறக்க உத்தரவாதம் இல்லாததால் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் அதிருப்தி
» அக்.31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
திடீர்நகர் பகுதியில் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடக்கிறது. மேலும் திருட்டு உள்ளிட்ட பிற குற்றச்செயல்களும் தொடர்கிறது. இவற்றை தடுக்கவேண்டும். வாகனங்களை நொறுக்கிய நபர்களை உடனே கைது செய்யவேண்டும் என அறிவுறுத்தி கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த திலகர்திடல் உதவி காவல் ஆணையர் ரமேஷ், திடீர்நகர் காவல் ஆய்வாளர் சீதாலட்சும் ஆகியோர் சமரம் பேசினர். வாகனங்களை சேதப்படுத்திய நபர்கள் கைது செய்யப்படுவர்.
சேதமடைந்த வாகனங்கள் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும் என, உறுதியளித் தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago