திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த காவலரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மணல் திருட்டுக்கு உடந்தையாக காவல்துறை அதிகாரிகள் யாரும் செயல்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் லட்சுமி நாராயணன், மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்தனர்.
» தூத்துக்குடி ஆவின் நிர்வாகக்குழு தேர்தல் வழக்கில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
» வருகிற தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்: ஹெச்.ராஜா பேட்டி
இது குறித்து விசாரணை நடத்தியதில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமிநாராயணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுபோன்று மணல் கடத்தலுக்கு உதவியாக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செயல்பட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago