தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே திருமணமான இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ஜாகிர்உசேன் நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் சண்முகராஜ் (36). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே லாட்ஜில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகவள்ளி (24) என்பவர் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் சண்முகராஜ் மட்டும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் மனைவி முருகவள்ளி நடத்தையில் சண்முகராஜ் சந்தேகம் அடைந்ததாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
» மதுரையில் திமுக பிரமுகர் வி.கே.குருசாமி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
» கயத்தாறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் முருகவள்ளியை, கழுத்தில் கயிறால் இறுக்கி கொலை செய்து விட்டு, தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு சண்முகராஜ் சென்று விட்டார்.
நேற்று முழுவதும் அவர்களது வீடு பூட்டியிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்த போது முருகவள்ளி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் பிரேமா, சார் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான தாளமுத்துநகர் போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார், டிஎஸ்பி., கணேஷ் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிந்து சண்முகராஜை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 mins ago
க்ரைம்
3 hours ago
க்ரைம்
4 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago