சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு: பலாத்காரம் செய்து கொலையா?- போலீஸ் தீவிர விசாரணை

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கல்விளை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இன்று காலை கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்நிலையில் கல்விளையில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே உள்ள கால்வாய் பாலத்துக்கு அடியில் தண்ணீர் தொட்டி ஒன்றில் சிறுமி உடல் கிடப்பதாக சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸார் அங்கு சென்றுபார்த்த போது, காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் தான் அது என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்