பைக்கில் ஆபத்தான சாகச விளையாட்டு: கண்டித்த நபரை கத்தியால் குத்திக் கொன்ற 3 சிறுவர்கள்- டெல்லியில் பயங்கரம்

By ஏஎன்ஐ

டெல்லியின் ரகுவீர் நகர் பகுதியில் 25 வயது நபரை 3 சிறுவர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 8ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் புகாராக இன்று மாறவே போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘மணீஷ் என்ற அந்த நபர் ஜூலை 8ம் தேதியன்று பைக்கில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டு ஆபத்தாக விளையாடிய சிறுவர்களைக் கண்டித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அவரை பலமுறை அடித்து உதைத்து கொலையே செய்து விட்டனர், அவரை மருத்துவமனைக்கு இட்டுச் சென்றபோது மணீஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றனர்.

பரபரப்பான இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஒரு நபரை மூன்று பேர் அடித்து உதைத்து சரமாரியாக கத்தியால் குத்தியது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சிறுவர்கள் உள்ளூர்பகுதியைச் சேர்ந்தவர்கள். 3 பேரையும் அடையாளம் கண்டுப்பிடித்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சிறுவர்கள் நடுத்தெருவில் போவோர் வருவொரை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசங்கள் செய்து வருவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. மணீஷ் இதனை கண்டித்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து நம்மைக் கண்டிக்கிறாரே என்ற ஆத்திரம் பீறிட கண்டித்தவரை அடித்து உதைத்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்