மதுரையில் ஊரடங்கை மீறியதாக 95 நாட்களில் 27,402 வழக்குகள் பதியப்பட்டு, 35,405 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, 5-ம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது.
மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கையொட்டி காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், தகுந்த பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் (புறநகர்) மார்ச் 24 முதல் ஜூன் 29-ம் தேதி வரை 95 நாட்களில் ஊரடங்கு உத்தரவு, விதிமுறைகளை மீறியதாக மாவட்ட அளவில் 27,402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 35,405 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 57 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, மதுவிலக்கு குற்றச் செயல்கள் குறித்தும் போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் அந்தந்த காவல் நிலைய எல்லையில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், உணவுக்கு தவிக்கும் மக்களுக்கு முடிந்தவரை உணவுப் பொருட்கள் வழங்கும் பணியிலும் ஈடுபடவேண்டும் என, காவல்துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago