மத்திய டெல்லியில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மனிதரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது.
இந்நிலையில் தெரு நாய் ஒன்று பக்கத்து வீட்டு நபர் ஒருவரை கடித்ததாக தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரிஜ் மோகன் (57) என்பவருக்கும் அண்டை வீட்டு நபரான பிரகலாத் (21) என்பவருக்கும் சண்டை ஏற்பட்டது
இருவரும் கடுமையாகக் கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். பிரகலாத் அப்போது அவரது செயலால் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது, மனிதர்களைக் கடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாக சண்டையிட்டார்.
பிறகு ஆத்திரம் தாங்காத பிரகலாத் தன் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து பிரிஜ் மோகனை சரமாரியாகக் குத்தியுள்ளார். உடனே மோகன் மருத்துவமனைக்கு இட்டுச் செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான பிரகலாத் தேடப்பட்டு வருவதாக உதவி ஆணையர் சஞ்சய் பாட்டியா தெரிவித்தார்.
ஆனால், “பிரகலாத் முகக்கவசம் மாட்டிக் கொண்டு கிருஷ்ணா சந்தையில் அலைவதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை விரட்டிப் பிடிதோம்” என்கிறது போலீஸ் தரப்பு.
பிரகலாத்துக்கு ஒரு சகோதரன் இரண்டு சகோதரிகள் உள்ளனர். தந்தை பணியாற்றி வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
டெல்லி மட்டுமல்ல நாடு முழுதுமே தெருநாய்களுக்கு உணவளித்து வளர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது, இது அப்பகுதியில் வாழும் அனைவரையும் ஈர்ப்பதில்லை, குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும் போது, பெரியோர்கள் கடைகளுக்குச் செல்லும் போது இந்தத் தெருநாய்கள் குரைப்பதும், துரத்துவதும், சில வேளைகளில் கடிப்பதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஆங்காங்கே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொலையில் முடிவதும் நடந்து வருகிறது. பொதுவாகவே நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை சூழலில் பேரிடர் காலம் இன்னும் மோசமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago