சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் பெரம்பலூர் அருகே தாய்-மகள் கொலை; மற்றொரு மகள் மகனுடன் கைது

By அ.சாதிக் பாட்சா

பெரம்பலூர் அருகே தன் தாயையும் சகோதரியையும் கொலை செய்த வழக்கில் 35 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் 14 வயது மகன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் இளங்கோ நகரைச் சேர்ந்தவர் ராணி (60). கணவரை இழந்த இவருக்கு வள்ளி (35), ராஜேஸ்வரி (32) என இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரின் கணவர்கள் வெளிநாட்டில் வேலைசெய்து வருவதால் ராஜேஸ்வரி தாய் வீட்டிலும், வள்ளி தனது 14 வயது மகனுடன் வேறு வீட்டிலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜூன் 19 அன்று ராஜேஸ்வரி அவரது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் சடலமாகக் கிடந்தார். ராணி மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராணி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

தாய், மகள் இருவரின் மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து மருவத்தூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில், தனது அம்மா ராணி மற்றும் சகோதரி ராஜேஸ்வரி ஆகியோரை வள்ளியும் அவரது 14 வயது மகனும் சேர்ந்து வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் நேற்று (ஜூன் 21) இரவு கைது செய்த மருவத்தூர் போலீஸார், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வள்ளியை பெரம்பலூர் கிளைச் சிறையிலும், 14 வயது சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்