ஆந்திரா நெல்லூரில் பயங்கரம்: மனைவியை உயிரோடு புதைத்துக் கொன்ற கணவன் 

By ஏஎன்ஐ

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கோட்லாபலம் என்ற கிராமத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து பிறகு உயிருடன் அவரை புதைத்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

நெல்லூர் மாவட்டம் கோட்லபாலம் கிராமத்தில் வசிப்பவர்கள் பொன்னுரு சுபாஷினி (37), இவரது கணவர் புதாபுக்கல சுவாமுலு (30), சுவாமுலு, சுபாஷினியின் 3-வது கணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

“27ம் தேதி இரவு இருவரும் நன்றாகக் குடித்துள்ளனர். அதன் பிறகு குடும்பத் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த சுவாமுலு மனைவியை அடித்து உதைத்துள்ளார். குச்சியைக் கொண்டு தாக்கிய போது சுபாஷினி மயக்கம் அடைந்தார். சுபாஷினியின் 7 வயது மகள் எங்களுக்குத் தகவளிக்கும் போது தன் தாய் உயிருடன் இருக்கும் போதே சுவாமுலு அவரை குழிதோண்டிப் புதைத்தார் என்று தகவல் அளித்தார்” என்று காவல் ஆய்வாளர் பிரதாப் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக மனைவியை குழி தோண்டிப் புதைத்துள்ளார் சுவாமுலு. இதனையடுத்து சம்பவ இடத்த்துக்கு விரைந்த போலீசார் சுபாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

சுவாமுலு தலைமறைவாகியுள்ளார், அவரைத் தேடி வருவதாகக் கூறிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

க்ரைம்

3 mins ago

க்ரைம்

3 mins ago

க்ரைம்

53 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

மேலும்