திருச்சியில் காஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் இது தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஏற்கெனவே இறந்த இளைஞரின் சடலும் தீயில் கருகியது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகேயுள்ள பூலாங்குடி காலனி பாரதி நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகௌரி(60). இவர் வீட்டில் இன்றிரவு திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயகௌரி, அவரது மகள்கள் விஜயலெட்சுமி (32), விஜயவாணி (29), ஆகியோர் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர். விஜயலட்சுமியின் மகன் விஜயகுமாரின் (28) சடலமும் எரிந்தது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் நவல்பட்டு போலீஸார் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
» அரசுப்பணி வாங்கித் தருவதாக பண மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
» தேவகோட்டையில் மதுக்கடையில் துளையிட்டு சாவகாசமாக மருந்து அருந்திய கொள்ளையர்கள்
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘மணிகண்டன் சென்னையில் தங்கியிருந்து பணிபுரிந்தபோது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அங்கிருந்து திருச்சியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.
இங்கு வந்த பிறகு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அவரால் முழுமையாக சிகிச்சைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் இன்று மாலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. எனவே குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்துள்ளனர்.
108 பணியாளர்கள் அங்கு சென்று விஜயகுமாரை பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையறிந்த அவரது தாய் மற்றும் சகோதரிகள் மிகுந்த வேதனையுடன் இருந்துள்ளனர்.
இந்த சூழலில்தான் அவர்களது வீட்டிலிருந்து சிலிண்டர் வெடித்துச் சிதறிய சத்தம் கேட்டதாகவும், அதன்பின் ஓடிவந்து பார்த்தபோது 4 பேரும் தீயில் கருகி சடலமாக கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
விஜயகுமார் இறந்த துயரம் தாங்க முடியாமல் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற மூவரும் விஜயகுமார் உடலுடன் சேர்த்து தங்களது உடலையும் தீவைத்துக் கொள்ளும் வகையில் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago