மதுரையில் ஊரடங்கை மீறிய 13,085 பேர் கைது; 5049 வாகனங்கள் பறிமுதல்

By என்.சன்னாசி

மதுரையில் கரோனா ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த வகையில் 13,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 5049 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, 2-ம் கட்ட ஊடரங்கு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவின் பேரில், தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறுவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக மார்ச் 24 முதல் 9,711 வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 13,085 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 5049 வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏப்., 29-ம் தேதி மட்டும் 282 வழக்கு பதிவு செய்து, 375 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா மற்றும் ஊரடங்கு விதிமீறல் தடுக்க, தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என, எஸ்பி எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்