மதுரை கருப்பாயூரணியில் போலீஸார் ஆய்வுப் பணியின்போது, இறைச்சிக்கடைக்காரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை அருகிலுள்ள கருப்பயூரணியைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம் (75). அங்குள்ள பஜாரில் இறைச்சிக் கடை நடத்திவந்தார்.
இவரது கடைக்கு அருகில் மருமகன் ஷாஜகான் என்பவரும் கோழி இறைச்சிக்கடை நடத்துகிறார். ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 8.30 மணியளவில் பஜார் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அரிசிக்கடை ஒன்றில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை சமூக இடைவெளிவிட்டு நிற்கும்படி போலீஸார் ஒழுங்குப்படுத்தினர்.
அப்போது, அருகில் நின்ற ஷாஜகானை பார்த்து, இறைச்சிக் கடையெல்லாம் திறக்கக் கூடாது என, போலீஸார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸாருக்கும், ஷாஜகானுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்து, மாமனார் அப்துல் ரகீம் அங்கு வந்தார். அவர் மருமகனை சத்தம்போட்டு அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் அப்துல் ரகீம் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அவரை காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் மரணம் அடைந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த அவரது மருமகன்கள், உறவினர்கள் போலீஸார் தான் இதற்குக் காரணம் என, கூறி அவர்கள் போலீஸாருக்கு எதிராக மரைக்காயர் உடலுடன் திடீர் சாலை மறியல் செய்தனர்.
இச்சம்பவத்தால் கருப்பாயூரணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் கூறியது: போலீஸார் மரைக்காயர் மருமகன் சத்தம் போட்டது உண்மை. சத்தம் போட்ட போலீஸார் அங்கிருந்து புறப்பட்டு சென்றபின், அங்கு வந்த மரைக்காயர் போலீசுடன் ஏன் வாக்குவாதம் செய்கிறாய் என, கூறி மருமகனை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் மயங்கி விழுந்து இறந்திருப்பது தெரிந்தது.
போலீஸார் அவரை ஒன்றுமே செய்ய வில்லை.சந்தேகம் இருந்தால் புகார் கொடுங்கள் விசாரிக்கிறோம் என, தெரிவித்தோம். ஆனாலும், அவரது மற்றொரு மருமகன் சேட் உள்ளிட்ட குடும்பத்தினர் நல்லமுறையில் அடக்கம் செய்கிறோம், பிரேத பரிசோதனை வேண்டாம் என, எழுதி கொடுத்துவிட்டனர், என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago