விருதுநகரில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் அருகே பாண்டிய நகர் காந்தி நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஸ்டீபன்ராஜ் என்பவரை விருதுநகர் ஊரகக் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் நகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் கடைகளில் போலீஸார் சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர்.
இது குறித்த விசாரணையில் விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் உள்ள ஜோசப் ராஜா என்பவருக்குச் சொந்தமான குடோனில் விருதுநகர் கட்டையாபுரம் ஆவலப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (25) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து இன்று காலை விருதுநகர் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சோதனையிட்டனர். சோதனையில் ரூபாய். 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கிடைக்கப் பெற்றது.
அதனைப் பறிமுதல் செய்த போலீஸார் ஸ்டீபன் ராஜை கைது செய்தனர். இதுகுறித்து விருதுநகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago