நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி கனகசபை புதுச்சேரியில் இன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கோவிந்த சாலை திருமுடி நகரைச் சேர்ந்தவர் கனகசபை (55). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று (மார்ச் 5) வீட்டுப் படுக்கை அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீஸார் விரைந்து சென்று, கனகசபை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, கனகசபை ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் பிரச்சினை இருந்து வந்ததும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
41 mins ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago