தேனி உத்தமபாளையம் அருகே மகளைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை: வேலைக்குச் செல்லாத கணவரால் விபரீதம்

By என்.கணேஷ்ராஜ்

மதுவுக்கு அடிமையான கணவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் உத்தமபாளையம் அருகே மகளைக் கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள அணைப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் அனுசுயாதேவி (33). இவர் திருமணமாகி கூடலூரில் வசித்து வந்தார். இவருக்கு சாருதர்சனா (14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

அனுசுயாதேவியின் கணவர் லட்சுமணன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறார். மதுப்பழக்கமும் இருந்துள்ளது. எனவே கடன் அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் அனுசுயாதேவி தனது குழந்தைகள் படிப்பிற்காக ராயப்பன்பட்டிக்கு சில வாரங்களுக்கு முன்பு குடிபெயர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் மகளின் பிறந்தநாளுக்கு வந்த லட்சுமணன் கூடவே தனது மகனை மட்டும் அழைத்துச் சென்றுள்ளார்.

மகனைப் பிரிந்ததால் மனவேதனையில் இருந்த அனுசுயாதேவி தனது மகளை் சாருதர்சனாவை தூக்கில் மாட்டி கொலை செய்து விட்டு வேறொரு அறையில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனோகரன் புகாரின் பேரில் ராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் மாயன் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்