கோவையில் தம்பதியை கட்டிப்போட்டு 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

By டி.ஜி.ரகுபதி

கோவை சுங்கம் அருகே தம்பதியரை கத்தியைக் காட்டி மிரட்டி 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

கோவை சுங்கம் அருகேயுள்ள பாரி நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் மேரி. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரது கணவர் பிரான்ஸ் ரொசாரியோ.

இவர்கள் நேற்று (மார்ச் 3) இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், இன்று (மார்ச் 4) அதிகாலை 1.30 மணிக்கு இவரது வீட்டுக்கதவை உடைத்து மர்ம நபர்கள் 4 பேர் உள்ளே நுழைந்துள்ளனர்.

முகமூடி அணிந்திருந்த நால்வரும், தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களைக் கட்டிப் போட்டனர். பின்னர் வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றனர்.

இதையடுத்து, வீட்டின் மேல்தளத்தில் உறங்கிக்கொண்டிருந்த பிரான்ஸ் ரொசாரியாவின் தந்தை, காலையில் பிரான்ஸ் ரொசாரியா - எலிசபெத் மேரி தம்பதியர் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன்பின்னர், தம்பதியரை அவர் மீட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ராமநாதபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்