மும்பையில் சிஎன்ஜி கியாஸ் நிரப்பும் நிலையத்தில் 5 ரூபாய் மீதி கேட்டதற்காக நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: செவ்வாய் மாலை ராம்துலர் சிங் யாதவ் (68) எபவர் போரிவல்லி கிழக்குப் பகுதிய்ல் உள்ள மகதானே கியாஸ் நிலையத்தில் தன் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்துள்ளார்.
நிரப்பிய பிறகு அதற்கான தொகையை கொடுத்த யாதவ் மீதி 5 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த 5 பேர் அவரைச் சூழ்ந்து நின்று கடும் கெட்ட வார்த்தைகளில் அவரை வசைபாடி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் யாதவ் பயங்கரக் காயங்களுடன் சரிய 5 பேரும் சம்பவ இடத்தை விட்டுப் பறந்தனர். கடும் துயரத்திலும் மனவேதனையிலும் இருந்த மகன் சந்தோஷ் யாதவ் கஸ்தூரிபா காவல்நிலையத்தில் தன் தந்தை காயங்களின் காரணமாக மரணமடைந்ததாகப் புகார் அளித்தார்.
இதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு ஐவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பலியானவர் பல்கார் மாவட்டத்தின் நலஸ்போரா பகுதியில் வசிப்பவர் பணி முடிந்து வீடு நோக்கி சென்ற போதுதான் இந்த பயங்கரம் அவருக்கு நிகழ்ந்தது, அதுவும் ஐந்து ரூபாய்க்காக ஒரு கொலை.
வெறும் 5 ரூபாய்தான் காரணமா அல்லது முன்பகை எதுவும் காரணமா வேறு விவகாரமா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
31 mins ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago