ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைகளில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ளன என்.பி. மருத்துவமனை, குமரன் மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனைகளில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் அம்பிளிக்கையில் உள்ள நல்லுசாமி, நடராஜன், கருப்புச்சாமி, நாட்ராயன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

வருமானவரித்துறை உதவி ஆணையர் சாந்தசொரூபன் தலைமையில் திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய ஊர்களில் இருந்து வந்த 14 வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை என ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

மருத்துவமனை, வீடுகளில் ஆவணங்களைக் கைப்பற்றி முறையாக வருமானவரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனரா என சரிபார்த்தனர். காலை தொடங்கிய சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவும் நீளும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

37 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

க்ரைம்

11 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

மேலும்