டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு ஊழியர் ஒருவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை அடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை காவல்துறையில் பணிபுரியும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த சித்தாண்டி குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குரூப் 2 ‘ஏ’, குரூப் 4 தேர்வுகளில் மாநில அளவில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து சிவகங்கை வந்த சிபிசிஐடி தனிப்படை போலீஸார் காரைக்குடி முத்துப்பட்டணம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் வேல்முருகன் என்பவரிடம் விசாரணை செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர் கைதாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இவர் சித்தாண்டியின் தம்பி என்பதும், கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது குடும்பத்தில் முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்ற மற்றவர்களையும் விசாரிக்க வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago