திருச்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் பலி: கொலையா? தற்கொலையா? என போலீஸ் விசாரணை

By அ.வேலுச்சாமி

திருச்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியானார். இளைஞரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதால் இது கொலையா? தற்கொலையா? அல்லது விபத்தா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் அமைந்துள்ள வசந்த் நகர் அருகே இருக்கிறது சந்தோஷ் நகர். இப்பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிக்குமார் 31. இவர் அதே பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நடத்தி வருகிறது. முறையாக அனுமதி பெற்றே இந்த மையத்தை அவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஜன.17) காலை 9.30 மணியளவில் சசிக்குமாரின் அறையிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து அவரின் தாயார் ரெஜினா அறைக்குள் விரைந்து சென்று பார்த்திருக்கிறார். அப்போது, சசிக்குமார் முன் நெற்றியில் குண்டு பாய்ந்து காயமடைந்து கிடந்துள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீஸார் தகவலறிந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். திருச்சி பொன்மலை உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் சசிக்குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையின்படி சசிக்குமார் தனிப்பட்ட காதல் பிரச்சினையோ, குடும்பப் பிரச்சினையோ இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இதனால் இந்த சம்பவம் தற்கொலையா, கொலையா இல்லை விபத்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சசிக்குமார் மீது பாய்ந்த தோட்டா சிங்கிள் பேரல் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய 0.22 மி.மீ அளவிலானது.

இந்த வகை துப்பாக்கி நீளமாக இருக்கும் என்பதால் இதனை தானாக ஒருவர் இயக்கி தற்கொலை செய்வது கடினம். அதன் காரணமாகவே போலீஸார் இது கொலையா அல்லது விபத்தா என விசாரித்து வருகின்றனர்.
சசிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்