டிஜிபி பதவி உயர்வுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 88 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்திற்கு 6 டிஜிபிக்கள் அனுமதி உண்டு. ஆனால் இம்முறை பலருக்கும் பதவி உயர்வு தாமதமானதால் அரசு சிறப்பு அனுமதி வாங்கி, கூடுதலாகப் பலரையும் டிஜிபியாக பதவி உயர்த்தியது.
11 டிஜிபிக்கள் வரை தமிழகத்துக்கு இருந்தனர். இதில் முதன்மைப் பதவி சட்டம் ஒழுங்கு டிஜிபி. இது தவிர தீயணைப்புத்துறை, ரயில்வே, சிபிசிஐடி, சிறைத்துறை, மண்டபம் அகதிகள் முகாம், போக்குவரத்துக் கழகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு, மின்வாரிய விஜிலென்ஸ், மாநில மனித உரிமை ஆணையம் என பல டிஜிபிக்கள் உள்ளனர்.
தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி தவிர மேலும் 9 டிஜிபிக்கள் பதவியில் உள்ளனர். இந்நிலையில் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் 3 பேர் ஏடிஜிபிக்களாக உள்ளனர். அவர்களுக்கு டிஜிபியாகப் பதவி உயர்வுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க 1988-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 3 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.
1. சஞ்சய் அரோரா . 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தற்போது அயல் பணியில் டெல்லியில் இருக்கிறார். 2025-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வு பெறுகிறார்.
2. சுனில்குமார் சிங். பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார்.
3. சுனில் குமார். ஆவின் ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் இவர் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி. இவர் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்.
தற்போது தமிழகத்தில் உள்ள டிஜிபிக்கள் விவரம்:
1. ஜெ.கே.திரிபாதி - டிஜிபி - சட்டம் ஒழுங்கு (1985 பேட்ச்) ஜூன் 2021 ஓய்வு.
2. ஜாஃபர் சேட் - டிஜிபி - சிபிசிஐடி (1986 பேட்ச்) டிசம்பர் 2020-ல் ஓய்வு.
3. லட்சுமி பிரசாத் - டிஜிபி - மாநில மனித உரிமை ஆணையம் (1986 பேட்ச்) மே 2020-ல் ஓய்வு.
4. அசுதோஷ் சுக்லா - டிஜிபி - சென்னை மெட்ரோ போக்குவரத்துக்கழகம் (1986 பேட்ச்) ஜனவரி 2021-ல் ஓய்வு.
5. மிதிலேஷ்குமார் ஜா - டிஜிபி - அயல் பணியில் இருக்கிறார் (1986 பேட்ச்) ஜூலை 2021-ல் ஓய்வு.
6. தமிழ்ச்செல்வன் - டிஜிபி - மின்வாரிய விஜிலென்ஸ் (1986 பேட்ச்) மே 2021-ல் ஓய்வு.
7. சைலேந்திர பாபு - டிஜிபி - ரயில்வே (தீயணைப்புத்துறை) (1987 பேட்ச்) ஜூன் 2022-ல் ஓய்வு.
8. கரன்சின்ஹா - டிஜிபி - காவலர் பயிற்சிக் கல்லூரி (1987 பேட்ச் ) பிப்ரவரி 2022.
9. பிரதீப் வி பிலிப் - டிஜிபி - உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு (1987 பேட்ச் ) செப்.2021 -ல் ஓய்வு.
10. விஜயகுமார் - டிஜிபி - லஞ்ச ஒழிப்புத்துறை (1987-பேட்ச்) செப் 2020-ல் ஓய்வு.
தற்போது பரிந்துரைக்கப்பட்டவர்கள் டிஜிபியானால் 13 பேர் டிஜிபிக்களாக இருப்பர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
14 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago