தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்? துப்பாக்கிகளுடன் கியூ பிராஞ்ச் போலீஸிடம் சிக்கிய 3 பேர்

By செய்திப்பிரிவு

தென் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் செயல்பட்ட 3 பேரை சென்னை கியூபிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அம்பத்தூர் இந்து முன்னனி பிரமுகர் கொலை வழக்கு மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கதிற்கு ஆள் சேர்த்த வழக்கு என இரு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகிய மூன்று நபர்களை தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர் . கியூ பிராஞ்ச் போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று கியூபிராஞ்ச் போலீஸார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கியூ பிராஞ்ச் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெங்களூரைச் சேர்ந்த முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது என தெரியவந்தது.

தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. மேற்கண்ட மூவரும் இந்து முன்னனி பிரமுகர் சுரேஷ் கொலையில் தொடர்புடையவர்களும் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பில் இருந்ததாக போலீஸாரால் தேடப்பட்டுவரும் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகிய மூன்று நபர்களை வெளிநாடு தப்பிப்பதற்கு உதவியதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கியூ பிராஞ்ச் போலீஸார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக இருந்த இவர்கள் தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த வாய்ப்புண்டு என உளவுத்துறை எச்சரிக்கையால் தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த இரண்டு மாத காலமாக இவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 2 நபர்களை பிடித்து சென்னைக்கு வெளியே வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையை அடுத்து பெங்களூரைச் சேர்ந்த முகமத் அலி கான், இம்ரன் கான், முகமது சையத் ஆகிய 3 பேரை பெங்களூரில் கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

59 mins ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்