கோத்தகிரி அருகே பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை குண்டுபெட்டு காலனி பகுதியில் இன்று காலை தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தோட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் கால் ஒன்று மண்ணுக்குள் புதைந்த நிலையில் தெரிந்தது. குழந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோத்தகிரி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணில் உயிரோடு புதைத்ததும் அக்குழந்தை உயிரிழந்ததும் தெரியவந்தது. அவசரகதியில் புதைத்ததால் குழந்தையின் ஒரு கால் வெளியே தெரிந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? வீசியவர்கள் யார்? என்பது குறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago