ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய், குழந்தை மரணம்: உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும்,குழந்தையும் உயிரிழந்ததைக் கண்டித்து அவர்களது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசூரியமடை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீர்த்திகா தலைப் பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சேர்த்துள்ளனர்.

பிரசவத்தின் போது கீர்த்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கீர்த்திகாவும் அவரது குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சனிக்கிழமை காலை கீர்த்திகாவின் பிரசவத்தின்போது மருத்துவர்கள் செவிலியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

எஸ். முஹம்மது ராஃபி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்