விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (சனிக்கிழமை) காலை சட்டவிரோதமாக திரி தயாரித்தபோது பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் பரமசிவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பட்டாசு திரியில் ஏற்பட்ட திடீர் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அம்மையார்பட்டியைச் சேர்ந்த ராமசாமி (34) என்பவர் 60 சதவிகிதம் தீக்காயமும் கணேசன் (49) என்பவர் 40 சதவீத தீக்காயம் அடைந்தனர். மேலும் ஆலையில் இருந்த 5 கட்டிடங்கள் சேதமடைந்தன.
தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago