விருதுநகரில் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ரைஸ் மில் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது

By இ.மணிகண்டன்

விருதுநகரில் ரைஸ் மில்லுக்கு கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார், குடிமைப்பொருள் வழங்கல் துறை பறக்கும் படை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அல்லம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில் முன் வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் அது ரேஷன் கடையில் இருந்து ரைஸ் மில்லுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரைஸ் மில் உரிமையாளர் அல்லம் பட்டியை சேர்ந்த கண்ணன் (45) மற்றும் ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் ஓட்டுநர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகுமூர்த்தி (44) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் வேனில் கடத்தி வரப்பட்ட 2,200 கிலோ ரேஷன் அரிசி யையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் சக்திவேல் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்