மதுரையில் இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை: வீட்டில் தாய் இருந்தபோதே துணிகரம்

By என்.சன்னாசி

மதுரையில் தாயுடன் வீட்டில் இருந்தபோது, மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது.

மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள மாரி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர், புதுமண்டபத்தில் டெய்லர் கடை நடத்துகிறார். இவரது மகள் ரிஸ்வானா பானு(22). இவருக்கும், உறவினர் முகமது ரியாசுக்கும் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதத திற்கு முன்பு, இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். மகளுக்கு முகமஸ் இஸ்மாயில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்.

இந்நிலையில் இன்று மகளும், மனைவி மதினா பேகமும் வீட்டில் இருந்தபோது, மாடியில் ரிஸ்வானா மட்டும் தனியாக இருந்துள்ளார். மதியம் அவர் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தல்லாகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளர் (பொறு) கோட்டைசாமி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உடலை மீட்டு விசாரித்தனர். அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மிகவும் குறுகிய சந்துப் பகுதியில் வெளிநபர் வந்து, ரிஸ்வானா பானுவை கொலை செய்துவிட்டு தப்புவது கடினம். அதுவும் அவரது தாயார் வீட்டில் கீழ்ப் பகுதியில் இருந்தபோது, கொலை நடந்திருக்கிறது. வெளிநபர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு குறைவு. குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்குள் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்