தகவல் ரகசியம் காக்கப்படும்: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னை போலீஸார் புதிய வசதிகள் அறிமுகம்

By செய்திப்பிரிவு

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஏற்கெனவே அவசர போன் எண்கள் இருக்கும் நிலையில், காவலன் செயலிக்கு அடுத்து மேலும் பல புதிய வசதிகளை சென்னை போலீஸார் அமல்படுத்தியுள்ளனர். தகவல் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தனிப்பிரிவு, மகளிர் காவல் நிலையங்கள், காவலன் செயலி என பல பாதுகாப்பு வசதிகளை சென்னை காவல்துறை அமல்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தனி வாட்ஸ் அப் எண் உருவாக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அதன்படி புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தும் சென்னை பெருநகர காவல் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உயரிய நிலைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே கருத்துகளை வேண்டுகிறது.

உங்களது பார்வையில் சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ மற்றும் நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணர்கிறீர்களாயின் கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.

இத்தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான காவல் துறை நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்”.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை காவல்துறை வாட்ஸ் அப் எண், முகநூல் மெசஞ்சர், இமெயில் ஐடி, தபால் முகவரி உள்ளிட்டவற்றை அளித்துள்ளது. இவற்றில் எதையும் பயன்படுத்தி தகவல் அளிக்கலாம்.

தகவல் அளிக்கும் தளங்களின் விவரம்:


1. WhatsApp / SMS : 75300 01100


2. Facebook Messenger ID : Chennai City Police (Link is www.facebook.com/chennai.police)


3. E-Mail ID (இ.மெயில்) : dccwc.chennai@gmail.com


4. Postal address (அஞ்சல் முகவரி) :


துணை ஆணையாளர்,


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு,


சென்னை பெருநகர காவல் துறை,


கிரீம்ஸ் ரோடு (ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகம்) ஆயிரம்விளக்கு,


சென்னை-600006.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்