விராலிமலை அருகே எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம்: பாலியல் வன்கொடுமை செய்து கொலையா? - போலீஸார் விசாரணை

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே பாத்திமா நகர் பகுதியில், இன்று (டிச.17) சாலை ஓரமாக 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பது குறித்து அப்பகுதி பொதுமக்கள் விராலிமலை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் பாத்திமா நகர் பகுதியில் தீயிட்டு எரித்திருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் உத்தரவிட்டார்.

மேலும், இறந்த பெண்ணைப் பற்றி தகவல் தெரிந்தால் விராலிமலை காவல் நிலையத்துக்கு 9498160621, 9498100753 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்