விருதுநகரில் சோளக்காட்டில் கழுத்தறுபட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி ராணி சேதுபுரத்தில் மக்காச்சோளகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி ராணிசேதுபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் மனைவி சத்தியபாமா. கனகராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களின் ஒரே மகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அண்மையில்தான் மகன் வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வந்தார். நேற்று உறவினர் இல்லத் திருமணவிழாவிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், சத்தியபாமா மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

விவசாயம் செய்து வந்த சத்தியபாமா தினமும் காலை தனக்குச் சொந்தமான விவசாய காட்டிற்கு விவசாய பணிகளை கவனித்துவிட்டு மாலை வீடுதிரும்புவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஊரின் வடக்குப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாயக் காட்டில் பாசிப்பயறு பறிக்க சென்ற சத்தியபாமா நள்ளிரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் காட்டுப்பகுதியில் சத்தியபாமாவைத் தேடினர். வெளியூர் சென்றிருந்த மகனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்தவுடன் ஊர் மக்களுடன் சென்று பரளச்சி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

மகன், ஊர்மக்கள் காவல்துறையினர் சேர்ந்து மோப்பநாய் உதவியுடன் இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் சத்திய பாமாவை தேடினர். இரவு முழுவதும் தேடிக் கிடைக்காத சத்தியபாமா இன்று காலை மக்காச்சோளகாட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மேலும் சத்தியபாமாவை கொலை செய்த மர்மநபர்கள் கொலையை மறைப்பதற்காக உடலின் மீது சோளக்கதிர்களை வைத்து மறைத்து விட்டுச் சென்றுள்ளனர்

சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த பரளச்சி காவல்துறையினர், சத்தியபாமா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் சத்தியபாமாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விவசாய பணிக்கு சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்