மதுரையில் வங்கி உதவி மேலாளர் வீட்டில் 97 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1.65 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை சுப்பிரமணியபுரம் அழகிரி நகரைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் திருநகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மூத்த மகளுக்கு கடந்த 29-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில் மகள், மருமகனை சென்னையில் புதிய வீட்டில் குடியமர்த்திவிட்டு வருவதற்காகக் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார்.
மகளின் திருமண நகைகளை (97 பவுன்) வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். சென்னையில் புதிய வீட்டில் பாதுகாப்பு எப்படி என்று பார்த்துவிட்டு நகைகளைக் கொண்டு செல்லலாம் என்பதற்காக நகைகளை தனது வீட்டில் வைத்துச் சென்றுள்ளார்.
மகள், மருமகனை ஊரில் விட்டுவிட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மதுரை திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அறிந்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டைத் திறந்துபார்த்தபோது வீட்டிலிருந்த நகைகள், ரொக்கமாக இருந்த ரூ.1.65 ஆயிரம் பணம் காணாமல் போயிருந்தன.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்துச் சென்றனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனசேகரன் ஊருக்குச் செல்லும் தகவல் தெரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டனரா என்று கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago