திருச்சி அரியமங்கலத்தில் கடந்த 3-ம் தேதி காணாமல் போன பள்ளி மாணவனை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கும்பல் அடித்துக் கொன்று குப்பை மேட்டில் புதைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இன்று உடலை தோண்டும் பணி நடக்க உள்ளது.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம், அண்ணாநகரைச் வசிப்பவர் அலியார்(38). இவரது மகன் அப்துல் வாஹித் (12). அருகிலுள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல் தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் திரிந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி அப்துல் வாஹித் திடீரென காணாமல் போனான். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிய தந்தை அலியார் இறுதியாக திருச்சி அரியமங்கலம் போலீஸில் கடந்த கடந்த 6-ம் தேதி புகார் அளித்தார்.
அரியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். அப்போது அப்துல் வாஹித் அதேபகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் மகன் உள்ளிட்ட சில சிறுவர்களுடன் கடைசியாக சுற்றித்திரிந்ததை கண்டதாக சிலர் தெரிவித்த அடிப்படையில் போலீஸார் அவர்களைப்பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் இளவரசன் (18) என்பவர் சிக்கினார். அவருடன் சரவணன் (19), மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் அப்துல் வாஹிதை அடித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்களுடன் திரிந்த சிறுவனை தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியதால் சிறுவன் வாஹித் ஒப்புக்கொள்ளாமல் சத்தம் போட்டதால் அடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவனை கொலை செய்த பின்னர் அவர்கள் அங்குள்ள குப்பைக் கிடங்கில் உடலை புதைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை இளவரசன் மற்றும் கூட்டாளிகளை போலீஸார் குப்பைக் கிடங்கிற்கு அழைத்து சென்று உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago