நீதிமன்றம் உத்தரவிடாமல் எதையும் ஒப்படைக்க முடியாது: பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு பதில்

By செய்திப்பிரிவு

பொன் மாணிக்கவேல் ஓராண்டு பணிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால் அனைத்து ஆவணங்கள், விசாரணை தகவல்கள், வழக்கு குறித்த ஆவணங்களை ஒப்படைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் வழக்கு விசாரணையில் உள்ளது நீதிமன்றங்கள் சொல்லாமல் எதையும் தர முடியாது என்று பொன் மாணிக்கவேல் பதிலளித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் சர்ச்சைக்குரிய அதிகாரியாகவே காலம் தள்ளியவர் பொன்மாணிக்கவேல். 1989-ம் ஆண்டு குரூப்.1 அலுவலராக காவல் பணியில் இணைந்தவர் பொன்.மாணிக்கவேல். 2010-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ரயில்வே, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஐஜியாக பதவி வகித்தப்பின் ஐஜியாக பதவி உயர்வுப்பெற்றார்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் சிலைகளை பிடிப்பதில் ஊடக வெளிச்சம் அதிகம் பெற்ற பொன்மாணிக்கவேல் ஒரு கட்டத்தில் அரசுக்கு தலைவலியானார். இதனால் அவரை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் தலையிட்டு அவரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக தொடர உத்தரவிட்டது.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஓய்வு பெறும் அன்று மீண்டும் அவரை சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தது. ஓராண்டுகால பதவிக்காலம் முடிந்தவுடன் பொன் மாணிக்கவேலை விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உடனடியாக அனைத்து ஆவணங்கள், வழக்கு குறித்த, விசாரணை குறித்த அனைத்தையும் மேலதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பொன் மாணிக்கவேல் இதை ஏற்கவில்லை, அவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, சிலைகடத்தல் ஏடிஜிபி ஆகியோருக்கு பதில் எழுதியுள்ளார். அதில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக என்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. வழக்கு விசாரணையில் உள்ளது.

எனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்றி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க சட்டப்படி அனுமதியில்லை”. என்று தெரிவித்துள்ளார். வரும் டிச. 2 அன்று பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. அதற்குப்பிறகே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்