தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தற்கொலைக்காக தாய் விஷம் கலந்து தயார் செய்துவைத்த பாலை மூத்த குழந்தை (10 வயது) அதன் தம்பிக்கு (5 மாத கைக்குழந்தைக்கு) புகட்டியதால் குழந்தை இறந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் தலைமறைவானாதால் போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மனைவி சுமதி. இவர் தனது கணவருக்குத் தெரியாமல் கடன் வாங்கியிருக்கிறார்.
அண்மையில் இவ்விவகாரம் கணவனுக்குத் தெரியவர கணவன் மனைவி இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனைவி சுமதி 5 மாத ஆண் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக அரளிவிதைகளை அரைத்து அந்த விஷத்தைப் பாலில் கலந்து தயாராக வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டின் வெளியே உறவினர்கள் யாரோ அழைத்த குரல்கேட்டு சுமதி வெளியே சென்றுள்ளார்.
அப்போது வீட்டினுள் இருந்த சுமதி - வீரபத்திரனின் 5 மாத ஆண் குழந்தை அழுதுள்ளது. தன் தம்பி அழுவதைக் கண்ட 10 வயது சிறுமி மேடையில் இருந்த பாலை பாட்டிலில் ஊற்றி குழந்தைக்குக் கொடுத்துள்ளார்.
அந்தப் பாலில் விஷம் கலந்திருந்தது சிறுமிக்கு தெரியாது. 5 மாத குழந்தையும் பாலைக் குடித்துள்ளது. ஆனால், விஷம் கலந்திருந்ததால் அசவுகரியத்தில் குழந்தை கதறியுள்ளது.
குழந்தையின் கூக்குரல் கேட்டு சுமதி உள்ளே வந்து பார்த்தபோது குழந்தை அரளி விதை சேர்த்த பாலை குடித்திருந்தது தெரியவந்தது.
உடனே அவர் கூச்சலிடவே அவரது தங்கை வந்துள்ளார். இருவரும் 5 மாத ஆண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
குழந்தையை சோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனிடையே தாய் மற்றும் தந்தை குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இருவருமே தலைமறைவானதால் வடகரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
23 mins ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago