விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்: 2 பேர் கைது

By இ.மணிகண்டன்

விருதுநகர்

விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.

இவரது மனைவி வசந்தி. விருதுநகர் அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் அலுவலக எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

தகவலறிந்த விருதுநகர் கிழக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அல்லம் பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்தன. அதில் பதிவான காட்சிகளின் கொலையாளிகளை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் அல்லம்பட்டி சேர்ந்த விக்கி, சேர்ம ராஜ், சதீஷ்குமார், கீர்த்தி ஸ்வரன், வெள்ளையன் மற்றும் சதீஷ்குமார் பெயர் கொண்ட இருவர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தேடப்பட்டு வந்த சேர்மராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்