ஆந்திராவில் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பரிதாப பலி

By செய்திப்பிரிவு

ஸ்ரீகாகுளம்

ஆந்திராவில் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பரிதாபமாக பலியானது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா பகுதியின் புது காலனியைச் சேர்ந்தவர் வரலக்‌ஷ்மி. இவர் தனது 11 மாதக் குழந்தை மனோஹரினிக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார்.

குழந்தை உணவை உண்ணாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென வேகமாக வீட்டினுள் ஓடிய குழந்தை தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்ட் அருகே இருந்த ஒயரில் காலிடரி கீழே விழுந்துள்ளது. ஒயரை இழுத்ததால் மேசை மீதிருந்த தொலைக்காட்சிப் பெட்டி கீழே கிடந்த குழந்தையின் மீது விழுந்துள்ளது.

இதில் குழந்தை படுகாயமடைந்துள்ளது. உடனே குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் காப்பாற்ற இயலவில்லை. குழந்தைக்கு யஷ்வந்த் என்ற அண்ணன் இருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காசிபுக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இருப்பினும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

- ஏஎன்ஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

14 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்