பொள்ளாச்சி
வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காவல் உதவி ஆய்வாளர் லத்தியை வீசியதால் மூன்று பேர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். போலீஸாரைக் கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த தென்சங்கம்பாளையத்தில் தனியார் திருமண மண்டபம் அருகே கோட்டூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சம்பந்தம், காவல் நண் பர்கள் குழுவினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக போத்த னூரைச் சேர்ந்த சன்பர் (18), அப்சல் (17), சர்தார் (25) ஆகிய 3 பேரும் தலைக்கவசம் அணியாமல் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீ ஸார் முயன்றபோது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற தால், தனது கையில் வைத்திருந்த லத்தியை பைக்கை நோக்கி உதவி ஆய்வாளர் வீசியதாக கூறப் படுகிறது. லத்தி சக்கரத்தில் சிக்கிய தால் 3 பேரும் நிலைதடுமாறி, ஆட்டோவில் மோதி படுகாயமடைந் தனர். மூன்று பேரையும் மீட்ட அப்பகுதி மக்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் செயலைக் கண்டித்து தென்சங்கம்பாளையம் சாலை சந்திப்பில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி. விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தி, உதவி ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago