அ.முன்னடியான்
புதுச்சேரி
வெடிகுண்டு வீச்சு, கொலை, வெட்டுக் குத்து, கொள்ளை சம் பவங்கள் மீண்டும் புதுச்சேரியில் அரங்கேறி வருவது மக்கள் மத்தி யில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
யூனியன் பிரதேசமான புதுச் சேரிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதே வேளையில் இங்கு கொலை, கொள்ளை, நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தற்போது மீண் டும் தலை தூக்கியுள்ளது. காவல் நிலையம் அருகிலேயே நடுரோட் டில் வெட்டுவது, போலீஸார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்துவது, வீடுகளை உடைத்து கொள்ளை யடிப்பது போன்ற குற்றச் சம்ப வங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக கடந்த மாதம் ரவுடி சாணி குமாரை கொலை செய்ய முடிவு செய்த கும்பல் திருவிழாக் கூட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியது, அதில் தப்பிய அவரை வெட்டிக் கொலை செய்தது. தொடர்ந்து காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிகுளம் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் என்பவர் மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்தன.
இதே போல் இம்மாதம் 1-ம் தேதி ஐய்யங்குட்டிப்பாளையத்தில் பாண்லே ஓட்டுநர் கத்தியால் குத்தி கொலை, 8-ம் தேதி கோரிமேடு காவல் நிலையம் அருகில் நடுரோட்டில் ஆறுமுகம் என்பவர் மீது சரமாரி அரிவாள் வெட்டு, ஜனார்த்தனன் என்பவரைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு வீச்சு என சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.
மூலகுளத்தில் கல்லூரி ஊழியர் வீட்டில் நகை திருட்டு, நடேசன் நகர் பகுதியில் தனியார் மதுக் கடையை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை, இளங்கோ நகரில் செல்போன் பழுது நீக்கும் கடையை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பணம், செல்போன்கள் திருட்டு, திருக்கனூர், மணலிப்பட்டு பகுதிகளில் 4 வீடுகளில், லாஸ் பேட்டையிலும் 3 வீடுகளில் அடுத் தடுத்த நாட்களில் கொள்ளை போன்ற சம்பவங்களும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதோடு கரிக்கலாம்பாக்கத்தில் ரோந்து சென்ற போலீஸார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியது, தவளக்குப்பத்தில் வாகன சோத னையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் மீது தாக்குதல், காலாப் பட்டில் தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தது போன்ற சம்பவங்களும் காவல் துறையினரையே சற்று நிலை குலையச் செய்திருக்கிறது.
காமராஜ் நகர் இடைத் தேர்தலுக்காக கூடுதல் பாதுகாப்பு, சிறப்பு கண்காணிப்பு இருந்து வரும் சூழலில் இந்த குற்றச் சம்ப வங்கள் அதிகரித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
புதுச்சேரியை பொருத்த வரையில் சில கி.மீ இடைவெளியில் அடுத்தடுத்த காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இதனால் குற்றச் சம்பவங்களை எளிதாக கண்டறிய முடியும். ஆனாலும், போலீஸார் போதிய கண்காணிப்பில் ஈடுபடுவ தில்லை என்பதே மக்களின் நீண்ட நாள் ஆதங்கம். இடையில் சற்று ஓய்ந்திருந்த குற்றச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது மக் களிடத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திருக்கிறது.
இளையோரிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்கள் அதிகரிப்பும் குற்றச் செயல்கள் அதி கம் நடைபெற முக்கிய காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். புதுவையின் பொது நலன் கருதி போலீஸார் ரோந்து பணிகளை தீவிரப் படுத்த வேண்டும். குற்ற வாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொது மக்கள்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago