ஆவடி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 4 பேர் விஷமருந்தி தற்கொலை: மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்

ஆவடி அடுத்த அண்ணனூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லை காரணமாக குடும்பத் தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், 24-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (65), சுப்பம்மாள் (60) தம்பதி. இவர்களுக்கு மகன்கள் நாகராஜ் (35), ரவி (30), மகள் கல்யாணி (28) உள்ளனர்.

கல்யாணி தனது கணவர் ஆறுமுகம் மகள்கள் சர்வேஷ்வரி (8), யோகப்பிரியா (6) ஆகியோருடன் அயப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், கல்யாணியின் கணவர் ஆறுமுகம் நேற்று மாலை அண்ணனூரில் உள்ள தனது மாமியார் வீட்டிலிருந்த தனது மனைவி குழந்தைகளை பார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது, அனைவரும் விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அத்துடன், கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ் (35), ரவி (30) ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்து கிடந் தனர். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மனைவி கல்யாணி மற்றும் 2 மகள் களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், அம்பத் தூர் மண்டல துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் ஜான் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையே இறந்துபோன கோவிந்தசாமி திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கட்டிடத் தொழிலாளி யான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு அண்ணனூரில் வந்து குடியேறி கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். தனது மகன்கள் இருவரையும் அதே தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அதிகளவு கடன் பிரச்சினையில் அவர்கள் சிக்கித் தவித்தார்களாம். இதனால், மனமுடைந்த கோவிந்த சாமி தனது குடும்பத்தினர் அனை வருடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள தாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து, திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

மேலும்