தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை:  7 பேர் கொண்ட கும்பல் பயங்கரம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே முன் விரோதத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் அபிமன்யூ (எ)திலீப் (19), இவர் செய்துங்கநல்லூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதிய உணவிற்காக கல்லூரியில் நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சிறிது தொலைவில், ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து வந்த அவரை, அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த 7பேர் கொண்ட கும்பல் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.

இதுகுறித்து தகவல் அறிந்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாணையில் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்ததுள்ளது.

சந்தையூர் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த மே மாதம் கொடை விழா நடந்துள்ளது. இதற்கான வரவு செலவு கணக்கை அபிமன்யு, அவரது தந்தை தமிழ் செல்வன் ஆகியோர் கோவில் நிர்வாகியான சப்பாணியிடம் கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட தகராறில் சப்பாணி மகன் குமார் (35) என்பவரை அபிமன்யு அரிவாளால் வெட்டினாராம். இதுதொடர்பான வழக்கு விசாரணை செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காக சப்பாணி மகன்கள் குமார் (35), காமராஜ் (33) உட்பட 7பேர் கொண்ட கும்பல் அபிமன்யுவை சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அருண் பாலகோபாலன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

10 hours ago

க்ரைம்

13 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்