மானாமதுரை
மானாமதுரையில் முன்விரோதம் காரணமாக தங்கமணி என்பவரை வெட்டிக் கொல்ல முயன்ற கும்பல் வங்கிக் காவலர் துப்பாக்கி சூட்டால் தப்பியோடியது. கொலை கும்பலைச் சேர்ந்த ஒருவர் மட்டும் காயங்களுடன் சிக்கினார்.
மானாமதுரை அமமுக ஒன்றியச் செயலாளராக இருந்த முன்னாள் கவுன்சிலர் சரவணன் சில மாதங்களுக்கு முன்னர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தங்கமணி(40) என்பவர் அண்மையில் ஜாமீனில் வெளிவந்திருந்தார்.
அவர் இன்று (புதன்கிழமை) மானாமதுரை கனரா வங்கி ஏடிஎம்.மில் பணம் எடுப்பதற்ககாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரைப் பழிதீர்க்க இரண்டு இருச்சக்கர வாகனங்களில் 4 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
இதனை அறியாத தங்கமணி கனரா வங்கி அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது பிச்சப்பனேந்தல் தமிழ்ச்செல்வன் (30), சலப்பனேந்தல் பூமிநாதன், தங்கராஜ் மற்றும் ஆவாரங்காட்டைச் சேர்ந்த மச்சக்காளை ஆகியோர் தங்கமணியை சுற்றிவளைத்து வெட்டினர்.
வெட்டுக்காயங்களுடன் தப்பித்த தங்கமணி உயிரைக் காப்பாற்ற அருகிலிருந்த வங்கிக்குள் நுழைந்துவிட்டார். அப்போது அந்த கும்பலும் அவரைப் பின் தொடர்ந்து வங்கிக்குள் நுழைய முயன்றது.
ஆனால் வங்கி வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் தனது துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கிச் சுட்டார். இதில் கொலைக் கும்பலைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் வலது காலில் குண்டு பாய்ந்தது. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்த மற்ற மூவரும் தப்பி ஓடினர்.
உடனே போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து காயமடைந்த தமிழ்ச்செல்வனை மானாமதுரை அரசு மருத்துவமனையிலும், வெட்டுப்பட்ட தங்கமணியை சிவகங்கை மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரத்தக்காயங்களுடன் வெளியேறும் தங்கமணி
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. ரோஹித் நாதன் ஆய்வு செய்தார்.
பரபரப்பான மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில் நடந்த கொலை முயற்சியும் திடீர் துப்பாக்கிச் சூடும் அப்பகுதியிலிருந்த பொதுமக்களை பீதியில் உறையச் செய்தது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago