ராஜபாளையத்தில் ஒரே வாரத்தில் மூன்று பேர் படுகொலை: அச்சத்தில் பொதுமக்கள்

By இ.மணிகண்டன்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொலைகள் தொடர்ந்து நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தானம் மகன் சதீஷ்குமார். வயது 28. இவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என புகார் எழுந்தது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று(புதன்கிழமை) காலையில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் செல்லும் சாலை ஓரத்தில் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக போலீஸார் மீட்டனர்.

இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது காதல் பிரச்சனையா என்ற கோணத்தில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சதீஷின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

மேலும் இந்த கொலை உடல் கிடந்த இடத்தில் நடைபெறவில்லை வேறு இடத்தில் கொலை செய்து வாகனத்தில் மூலம் கொண்டு வந்து அந்த இடத்தில் உடலை வீசி சென்றிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் தேவதானம் பகுதியில் இரண்டு கொலைகள் ராஜபாளையத்தில் ஒரு கொலை என மூன்று கொலை தொடர்ந்து நடந்துள்ளதால் ராஜபாளையம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்