கொடைக்கானல் மலைச்சாலையில் 100 அடி பள்ளத்தில் ஆம்னிவேன் கவிழ்ந்த விபத்து: இருவர் உயிரிழப்பு

By பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல் ,

கொடைக்கானல் மலைச் சாலையில் 100 அடி பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வருகிறார் ரஹ்மத்துல்லா. இவர் தனது உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வத்தலகுண்டு சென்றுவிட்டு நள்ளிரவில் கொடைக்கானலுக்குத் திரும்பியுள்ளார்.

வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே வந்தபோது கட்டுப்பாட்டினை இழந்து 100 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாகனத்தில் பயணம் செய்த ரூபி(18) ராசிக் பரித்(13) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரஹ்மத்துல்லா( 41), சாதிக் (41) உள்ளிட்ட நான்கு பேர் பலத்த காயமடைந்தனர், வாகனம் விபத்துக்குள்ளானதை அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் 100 அடி பள்ளத்தில் இருந்த இவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.

இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்