சென்னை
சென்னை டி.பி. சத்திரத்தில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, செய்வினைத் தகடு இருப்பதாக நம்பி தேடி வீட்டுக்குள் 25 அடி ஆழத்துக்கு பெண் ஒருவர் பள்ளம் தோண்டி யுள்ளார். 20 நாட்களாக தகட்டைத் தேடியவரைப் பிடித்து சந்தேகத் தின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை டி.பி. சத்திரம், கே.வி.என்.புரத்தைச் சேர்ந்தவர் ராஜா (45). இவரது மனைவி மைதிலி (43). இவர்கள் அங்குள்ள குடிசை வீடு ஒன்றில் வசித்து வரு கின்றனர். ராஜாவுக்கு சரியான வேலை இல்லை. மேலும் உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட் டுள்ளார். கை, கால்கள் செயலிழந் துள்ளன. இதனால், வறுமை நிலையில் இருந்துள்ளனர்.
இதற்கு செய்வினை கோளாறே காரணம் என மைதிலி நம்பியுள்ள தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள மின்ட் தங்கசாலையைச் சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் என்பவரைச் சந்தித்து கேட்டுள்ளார்.
மந்திரவாதி எனக் கூறப்படும் சுரேஷ், முதல் கட்டமாக மைதிலி யிடமிருந்து சிறிது பணத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து, “உங்கள் வீட்டுக்குள் செய்வினைத் தகடு புதைக்கப்பட்டுள்ளது. அதைத் தோண்டி எடுத்துவிட்டால் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிடும். கணவர் ராஜாவுக்கு உடல்நிலையும் சீராகி விடும்” என்று மைதிலியிடம் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய மைதிலி, மந்திரவாதி துணையுடன் நள்ளிரவு வேளையில் வீட்டுக்குள் குழி தோண்டி தகட்டைத் தேடி யுள்ளார். 20 நாட்களுக்கும் மேலாக தேடுதல் பணி நடந்துள்ளது. சுமார் 25 அடி ஆழத்துக்கு வீட்டுக்குள் பள்ளம் தோண்டிய பின்னரும் எந்தத் தகடும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, தோண்டிய மண்ணை மூட்டையாக சாக்கில் கட்டி வீட்டருகே மைதிலி போட்டு வைத்துள்ளார். சுமார் 70 மூட்டைகளுக்கும் மேல் அடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து டி.பி. சத்திரம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீஸார் மைதிலியிடம் விசாரணை நடத்தியதில், விபரங் கள் அனைத்தையும் தெரிவித் துள்ளார். இருப்பினும் மைதிலி, அவரது கணவர், மந்திரவாதி உள்ளிட்டோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டுக்குள்ளேயே ரகசியமாக பள்ளம் தோண்டியதில் வேறு ஏதே னும் பின்னணி உள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சொந்த வீட்டுக்குள் மந்திர தகடு இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கிணறு போல குழி தோண்டிய சம்பவம் டி.பி. சத்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago